Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊதிய உயர்வாக இதையெல்லாமா கொடுப்பார்கள்? குஜராத் வைர வியாபாரியின் தாராளம்!

குஜராத்தில், தன் நிறுவனத்தில் பணிபுரியும் 125 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக இருசக்கர வாகனகத்தைப் பரிசளித்துள்ளார், ஒரு வைர வியாபாரி.


குஜராத்தில், சூரத் பகுதியில் வைர வியாபாரம் செய்துவரும் லக்‌ஷ்மிதாஸ் வெக்கரியா, தன் நிறுவனத்தில் மொத்தம் 125 பேர் வேலை செய்கின்றனர். இந்த மாதம், ஊதிய உயர்வாக ஒவ்வொருவருக்கும் இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அசத்தி இருக்கிறார். பகுதி நேரப் பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி பணியாளர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதை ஒரு விழாவாக எடுத்து, சூரத் மக்களை வாயடைக்கச் செய்துள்ளார், லக்‌ஷ்மிதாஸ்.

gujarat diamond
 

இந்தச் சம்பவம், மற்றொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தோலாக்கியா, தனது தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பீட்டில் 400 வீடுகள் மற்றும் 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டார் சாவ்ஜி. தற்போது, சாவ்ஜிக்கு போட்டியாக அதே சூரத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மிதாஸ், ஊழியர்களுக்கு வாரி வழங்கிவருகிறார். சபாஷ் சரியான போட்டி!

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close