Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’திறமையில்லை!’ 600 ஐ.டி பணியாளர்களை நீக்கிய விப்ரோவின் காரணம்

திறமைக் குன்றியவர்கள் என 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது விப்ரோ நிறுவனம். எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. 

600 ஊழியர்களை நீக்கியது விப்ரோ

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனம் விப்ரோ,பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.  மிகப் பழமையான இந்த நிறுவனத்தின்  தலைவர் ஆஷிம் பிரேம்ஜி, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கின்படி, ஒரு லட்சத்து 79 ஆயிரம் பணியாளர்கள் விப்ரோவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவின் பெரிய நகரங்கள், வெளிநாடுகளிலும் விப்ரோ நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ஐ.டி நிறுவனங்கள் 60 சதவீதம் வட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளையே நம்பி இருக்கின்றன. மீதி 20 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும் 20 சதவீதம் மற்ற நாடுகளிலும் கிளைன்டுகள் இருக்கின்றனர். 

இந்திய ஐ.டி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று  வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிந்து கொடுக்க இங்கிருந்து ஐ.டி ஊழியர்களை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் ஆயிரக்கணக்கான இந்திய ஐ.டி வல்லுநர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில்தான் இந்தியா ஐ.டி துறைக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா முதலில் ஹெச்.பி-1 விசா வழங்குவதை குறைந்தது.

அடுத்ததாக, சிங்கப்பூர் உள்ளூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்தியர்களுக்குத் தடை விதித்தது. நியூசிலாந்து , ஆஸ்திரேலிய நாடுகளும் இந்திய ஐ.டி நிபுணர்களுக்கு விசா வழங்குவதை குறைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நாடுகளில்தான் இந்திய ஐ,டி வல்லுநர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நாடுகள் விதித்த தடை இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தத் தொடங்கிருக்கிறது. 

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான 'விப்ரோ' ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பெரிய நிறுவனமான விப்ரோ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது ஐ.டி. நிறுவன ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்கள் மத்தியில் பணி நிரந்தரமற்ற சூழல் நிலவும் மனநிலை உருவாகியுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுவதற்காக கடுமையான செயல் திறன் பணி மதீப்பிடு முறை பின்பற்றப்பட்டதாகவும் சில ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

திறமை, நிறுவனத்தின் இலக்குகளை, நிறுவனத்தின் வியூகம் வாடிக்கையாளர்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விப்ரோ தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது. இது முதல் கட்டப் பணி நீக்கம்தான் என்றும் எண்ணிக்கை 2 ஆயிரம் வரை உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  'அப்ரைசல்' எடுத்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Comprehensive Performance Evaluation Process என்ற அடிப்படையில் பணியாளர்களின் செயல்திறன், பிறருக்கு வழிகாட்டுதல், பணி மேம்பாடு ஆகியவை குறைந்த பணியாளர்கள் வேலை நீக்கத்துக்குள்ளாக்கியிருக்கின்றனர். 

விப்ரோ கடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த Ethisphere Institute  வழங்கும்  நெறிமுறைகளைச் சிறப்பாக கடைபிடிக்கும் நிறுவனம் என்ற விருதை தொடர்ந்து 6-வது முறையாக பெற்றிருந்தது.  2014-ம் ஆண்டு இந்தியாவின்  நம்பகத்தன்மையான பிராண்ட் வரிசையில் விப்ரோ 52-வது இடத்தைப் பிடித்திருந்தது. 

ஐ.டி துறை க்ளைன்டுகள் மட்டுமல்ல வெளிநாட்டைச் சேர்ந்த automation , artificial intelligence துறையை சேர்ந்த க்ளைன்டுகளும் தங்கள் நாடுகளுக்கே வந்து பணிபுரியும் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியுள்ளன. 

- எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close