Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பதியை அதிரவைத்த விபத்து! டீக்குடித்த 20 பேரின் உயிரைப் பறித்த லாரி

திருப்பதி அருகே தறிக்கெட்டு ஓடிய லாரி ஒன்று அங்கிருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே அமைந்துள்ள ஏர்பேடு காவல்நிலையத்தின் எதிரில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்ற லாரி ஒன்று மின் கம்பத்தில் மோதியுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த டீக்கடையினுள் லாரி புகுந்து, அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.  இதில், 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

திருப்பதி, காளஹஸ்தி செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஏர்போர்ட்டில் விபத்து நிகழ்ந்துள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close