Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் மீது பெரிய தாக்கம் இல்லை'- ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

'மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தின் மீது பெரிய தாக்கத்தை எற்படுத்திவிடவில்லை' என்று கூறியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் யக வேணுகோபால் ரெட்டி. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலும் விட்டது அரசு. இருப்பினும், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக பணப் புழக்கம் என்பது இந்திய அளவில் சீராக இல்லை. வங்கிகளில் பணத்தைக் கொடுத்து மாற்றுவதற்கும் பணம் எடுப்பதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்படி காத்திருந்த போதே பலர் இறந்த போகும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றது. 

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் யக வேணுகோபால் ரெட்டி, 'கிடைத்துள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது பொருளாதாரத்தின் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது. அதேபோல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணத்தின் மீதான தாக்கமும் குறைந்தளவே இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிட்டத்தட்ட, 100 கோடி மக்கள் இரண்டு மாத காலத்துக்கு சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த சிரமத்துக்கு அவர்கள் பொறுப்பு இல்லை. மிகவும் பெருமளவிலான சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகும், மக்கள் அமைதியாகவே இருந்தனர். இந்த அமைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் அருவருப்பையே இது காட்டுகிறது' என்று கூறியுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close