Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்து மணி நேர விசாரணைக்குப் பிறகு டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராக உத்தரவு!

கடந்த இரண்டு நாள்களாக டி.டி.வி. தினகரனிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகக் கூறி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று, கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கும் மேலாக தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரை, இன்று 2 மணி அளவில் ஆஜராகும்படி டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில்,  கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயும் இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, டெல்லி போலீஸ் அடையாறில் இருக்கும் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு நேரில் வந்து, விசாரணைக்கான சம்மனைக் கொடுத்துச்சென்றனர். அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருந்த இரு அணிகளும், தற்போது மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close