Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி!

டெல்லியில், நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 28 மாநில முதல்வர்களும் வந்திருந்தனர். இதையொட்டி, பா.ஜ.க ஆட்சி புரியும் மாநிலங்களின் முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். முதல்வர்கள் உடனான இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களும் உடனிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட மாநில முதல்வர்கள், அவரவர் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் முன்னிலையில் விளக்கினர். 

மேலும் பிரதமர் மோடி, பா.ஜ.க முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களை, வரும் 2022-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம் குறித்து ஆவணங்களை வகைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 2022-ம் ஆண்டைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அப்போதுதான் இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெறும். இதைப் போல இந்த சந்திப்பின்போது, சீக்கிரமே வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close