Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் – முடங்கியது புதுச்சேரி!

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று, தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது. அதையொட்டி, புதுச்சேரியிலும் தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திவருகிறது.

Pondicherry bandh
 

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க கட்சிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. புதுச்சேரியில், பிரதான வர்த்தக வீதிகளான நேரு வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி போன்றவைகள் வெறிச்சோடிக் காட்சியளித்தன. சிறிய பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை திறக்கப்படவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து தமிழக அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால், சுமார் ஐந்து தமிழக அரசுப் பேருந்துகளின் கன்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டதால், அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்துகள், கோரிமேடு எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், திரையரங்குகளில் இரண்டு காட்சிகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. 

புதுச்சேரி தி.மு.க தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில், பேருந்து நிலையத்துக்கு எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். போராட்டத்துக்கு, ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதால், ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close