Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாய வருவாய்க்கு வரி கிடையாது: அருண் ஜெட்லி விளக்கம்

’விவசாய வருவாய்களுக்கு எவ்விதமான வரியும் விதிக்கப்பட மாட்டாது’ என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி

நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேபராய் கருத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் அருண் ஜெட்லி ’விவசாய வருவாய்க்கு வரி இல்லை’ என்று கூறியுள்ளார். நேற்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேபராய், ‘விவசாய வருவாயில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரி விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாய வருவாய்க்கு என்றுமே வரி கிடையாது, அரசு அதற்கு முயற்சி செய்யவுமில்லை’ என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’அரசியலமைப்பின் அதிகார ஒதுக்கீட்டில் விவசாயம் சார்ந்த வருமானங்களுக்கு வரி விதிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது’ என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் நாடாளுமன்றத்திலேயே, ‘விவசாயம் சார்ந்த வருமானங்களுக்கு என்றுமே வரி விதிக்கப்பட மாட்டாது’ என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close