Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழலில் ஈடுபடும் ரயில்வே அதிகாரிகள்: நடவடிக்கைக்கு மோடி வலியுறுத்தல்!

'ரயில்வே அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ரயில்வே துறையை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

modi

 

'பிரகதி' எனும் பல்வேறு துறைச் செயலாளர்கள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகள்குறித்து காணொலி காட்சிமூலம் பிரதமர் உரையாடினார். ரயில்வே துறை அதிகாரிகள் மீது ஏராளமான புகார்கள் வருவதைச் சுட்டிக்காட்டினார். ரயில்வே அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ரயில்வே துறை மேற்கொண்டுள்ள முக்கிய கட்டமைப்புத் திட்டங்களின் நிலைகுறித்து ஆய்வுசெய்த பிரதமர், சாலைகள், மின்சாரத் துறையின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களையும் கேட்டறிந்தார். மும்பை மெட்ரோ, திருப்பதி -சென்னை நெடுஞ்சாலை, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சாலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள்பற்றியும் மோடி கேட்டறிந்தார்.

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கை எடுப்பதற்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா தொலைபேசி ஏற்படுத்தப்பட வேண்டும்; அதன்மூலம் அனைத்துவித குறைகள் மற்றும் விபத்து தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பூசி போடும் திட்டமான 'இந்திர தனுஷ்' திட்டத்தின் முன்னேற்றம்குறித்து பிரதமர் கேட்டறிந்தார். தடுப்பூசியானது அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தேசிய மாணவர் படை, நேரு யுவகேந்திரா அமைப்பில் உள்ள இளைஞர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022-ம் ஆண்டுக்குள், புதிய மாற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்கத் தேவையான திட்டங்களை அரசுத்துறை செயலாளர்கள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close