Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் வருமா வராதா பா.ஜ.க அரசே? ரயில் மீது ஏறிப் போராடிய பெண்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடுக்கு, மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால்,  பெண்கள் ஒன்றுக்கூடி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Jharkand
 

ஜார்கண்ட் மாநிலத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு இயங்கிவருகிறது. ஜார்கண்ட்டின் பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 கிராமங்களில் வசிப்போர், குடிநீருக்காகத் திண்டாடிவருகின்றனர். அங்கு, முதல்வராக இருக்கும் ரகுபர் தாஸின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது, ' 2022 -ம் ஆண்டுக்குள் ஜார்கண்ட் மாநிலத்தில் குடிநீர்த் தட்டுபாடு இருக்காது' என்பதுதான்.

கடந்த சில நாள்களுக்கு முன், இரண்டு முக்கிய  நீர்வளத் திட்டங்களைத் துவக்கி வைத்தார், ரகுபர் தாஸ். அப்போது, '2022-ம் ஆண்டுக்குள் ஜார்கண்ட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுத்தமான குடிநீர் வந்துசேரும்', என்றார்.

ஜார்கண்ட்டில், மாநில நீர்வள ஆதாரங்கள், குடிநீர் மற்றும் சுத்திகரிப்புத்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் சௌத்ரியும் குடிநீர்த் தட்டுபாடு குறைந்துவருவதாகப் பேசினார். 

இந்த நிலையில், ஆதித்யபூர் என்னும் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில வாரங்களாக குடிநீர் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும்நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அந்தக் கிராமத்தைக் கடக்கும் ரயில்களை நிறுத்தி, மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். ரயில் மீது ஏறி மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவருகின்றனர்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close