Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஎஸ்-3 வாகனத் தடை: போக்குவரத்துத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைக் குறைக்கும் வகையில், பிஎஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவுசெய்யத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே சாந்தி என்பவர் பிஎஸ்-3 தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில்,' மார்ச் 29-ம் தேதியே புதிய காரை வாங்கியும், பிஎஸ்-3 வாகனம் எனக் கூறப்பட்டு பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது' எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பே வாங்கப்பட்ட காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களையும் பதிவு செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close