Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

boat

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க 19 பேர் படகில் சென்றுள்ளனர். எதிர்பாராவிதமாக இவர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் படகில் இருந்த 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படை 8 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மீதம் ஐந்து பேரின் உடல்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமான ஆட்கள் படகில் பயணம் செய்ததே விபத்துக்கான காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close