Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிப்பூர்: நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு ஜம்ப்

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், பா.ஜ.க மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. பிரென் சிங், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, அங்கு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

Biren Singh


இதற்கிடையே, அங்கு ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். அதில் ஸ்யாம் குமார் என்பவருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மேலும் நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.


அதன்படி, சுர்சந்திரா, நம்தங் ஹகீப், லுகியோ, பிரா ஆகிய நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர். அவர்கள், மணிப்பூர் முதல்வர் பிரென் சிங் மற்றும் மணிப்பூர் பா.ஜ.க தலைவர் பாபனாடா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தனர். இதன் மூலம் மணிப்பூர் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனம் அடைந்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close