Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாள் கணக்கு தான்': மம்தாவுக்கு சவால் விடும் பா.ஜ.க

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி-க்கள் ஆகியோர் அரசுப் பணிகளுக்காக லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

BJP
 

இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. இந்நிலையில், சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை அடிப்படையாக வைத்து, திரிணாமுல் காங்கிரஸின் 13 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில், அமலாக்கத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ராகுல் சின்ஹா, "மம்தா முதலில் பெங்கால் ஆட்சியை காப்பற்றட்டும். பின் டெல்லி அரசியல் குறித்து கனவு காணலாம். அவர் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. மிகவும் மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரக்தியடைந்து விட்டனர். அவரது ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு விட்டன" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close