Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள் - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஓபன் சேலஞ்ச்!

இந்தியாவில் தேர்தலில் தோல்வியடையும்  கட்சிகள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு முறையை குறைகூறி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்திருக்கிறார். இதுவரை 16 முக்கிய கட்சிகள் மின்னனு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்கு சீட்டு முறையே பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் மக்களுக்கு  மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்து தவறான புரிதல் ஏற்படுகிறது. 

VVPAT

எனவே வெகு விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளோம். அங்கே நேரடியாக நிரூபித்து காட்ட அரசியல் கட்சிகளுக்கு ஓபன் சேலஞ்ச்  தரப்படும் என்றும் நசீம் தெரிவித்திருக்கிறார். மேலும், இனி வரும் எல்லா தேர்தல்களிலும் வாக்குப்பதிவு ரசீது சீட்டு வழங்கப்படும். இதன் மூலம் யாருக்கு ஒட்டு  போட்டோம் என்பதை மக்களே தெரிந்துகொள்ள முடியும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் 15 லட்சம் வாக்குப்பதிவு   ரசீது சீட்டு இயந்திரம் ரெடியாகிவிடும். 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுமைக்கும் வாக்குப்பதிவு ரசீது சீட்டு இயந்திரம் பயன்படுத்தபடும் முதல் நாடாக இந்தியா விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.  

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close