Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிதி ஆண்டை மாற்றியமைத்த மத்தியப்பிரதேச அரசு!

ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தை நிதி ஆண்டாகக் கணக்கிட மத்தியப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியா, சுமார் 300 ஆண்டுக்காலம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைத்தான் தற்போதும் பின்பற்றிவருகிறது. பெரும்பாலானவை, ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகள்தாம். அவற்றில் ஒன்றுதான் நிதி ஆண்டு கணக்கிடும் முறை. ஆங்கிலேயர் காலத்தில்தான் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் ஆண்டின் நிதி ஆண்டாகக் கணக்கிடப்பட்டு வந்தது. அந்த முறையே  இந்தியாவில் பின்பற்றப்பட்டுவருகிறது.

தற்போது, மத்தியப்பிரதேச அரசு அதனை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் நிதி ஆண்டாகக் கணக்கிடப்படும் என்று நேற்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்துக்கு  மாற்றக்கோரி, ஏராளமான பரிந்துரைகள் வருகின்றன. இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close