Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரிசோதனைக்கு சென்ற மருத்துவர்களை தேநீருடன் வரவேற்ற நீதிபதி கர்ணன்!

உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை, அவரது வீட்டில்வைத்து மருத்துவர்கள் குழு மனநலப் பரிசோதனை செய்தனர்.

 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், சட்டத்தை மீறியதாக வழக்குப்பதிந்து, ஆஜராக உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை செய்ய, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது. கொல்கத்தா மருத்துவமனையில்  மே 5-ம் தேதி மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்ட கொல்கத்தா நீதிபதி கர்ணன், 'உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவிவகிக்கும் தன் மீது வழக்குத் தொடர யாருக்கும் உரிமையில்லை' என கூறி ஆஜராக மறுத்தார்.

மேலும், தன் மீது வழக்குத் தொடர்ந்த உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளையும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதோடு, அவர்கள் ஏழு பேரின் பாஸ்போட்டுகளை முடக்கவும் ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றத்தின் தொடர் உத்தரவுகளை மதிக்காமல், மீண்டும் சர்ச்சையான கருத்தும், தீர்ப்பும் கூறிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநிலைகுறித்த மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 'மருத்துவப் பரிசோதனைக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன். என்னை வலுக்கட்டாயமாகப் பரிசோதனைசெய்தால், மேற்குவங்க காவல்துறைத் தலைவரை இடைநீக்கம் செய்து உத்தரவிடுவேன்' என்று நீதிபதி கர்ணன் கூறியிருந்தார்.

இதையடுத்து, இன்று கொல்கத்தாவில் உள்ள கர்ணன் வீட்டுக்கே சென்ற அரசு மருத்துவக் குழுவினர், அவருக்கு மனநலப் பரிசோதனை செய்துவருகின்றனர். அவர்களுடன், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க  மாட்டேன் என்று கூறியிருந்த கர்ணன், மருத்துவர்களிடம் இணக்கமான முறையில் பேசினார். வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தேநீர் வழக்கினார். அவர்களுடன் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். இருப்பினும், பரிசோதனை குறித்த விவரங்கள் பின்னர்தான் தெரியவரும். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close