Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எங்கே ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்?' - மோடியை சீண்டும் நக்மா!

nagma

மகிளா காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளர் நக்மா, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நக்மா, 'மோடி, நாட்டில் இருந்து வெளியே சென்ற கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வருவேன் என்றார். எங்கே அந்த கறுப்புப் பணம்? ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் இருப்பு வைக்கப்படும் என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது. தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, ராணுவத்தினரை மிக மோசமாக நடத்துகிறது. ராணுவத்தினர், தொடர்ச்சியாக அவர்கள் உணவு குறித்தும் அடிப்படை தேவைகள் குறித்தும் புகார் கூறிய வண்ணம் உள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் அரசு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை.

பாகிஸ்தானிடம் இருந்தும் மாவோயிஸ்ட்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதை விடுத்து, திரைப்படங்களுக்கு இந்தி சப்-டைட்டில்கள் போடுவதில் கவனம் செலுத்துவது ஏன்? மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது, 100 நாள் திட்டம் பற்றிப் பேசினார். இப்போதோ, பத்து ஆண்டுகள் திட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த புகார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னர் இருந்த ஓட்டுப்பதிவு முறையையே பின்பற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து.' என்று மத்திய அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close