Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கத்தரி வெயில்' என்பதன் உண்மை அர்த்தம் என்ன?

'கத்தரி வெயில் தொடங்கியது', 'அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது' போன்ற செய்தித் தலைப்புகளை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் தொடக்கத்தில் படித்திருப்போம். ஆனால், இந்த வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. இவை அறிவியல்பூர்வமான வார்த்தைகள் கிடையாது என்பதுதான் காரணம்.

‘காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி’, ‘வெப்பச் சலனம்’, ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’, ‘வளி மண்டல மேல் அடுக்கு’ போன்ற வானிலை சார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற்றவர், ஓய்வுபெற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன். அவர் இதுகுறித்து, 'அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது, 100 சதவிகிதம் வானிலைத் துறையின் வார்த்தை கிடையாது. அது, பஞ்சாங்கத்தின் வார்த்தை. வானிலைத் துறையானது, ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும்தான். இது, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலைத் துறை கூறுவதில்லை' என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close