Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்டை நாடுகளுக்கான பரிசு: இன்று மாலை விண்ணில் பாய்கிறது தெற்காசிய செயற்கைக்கோள்!

அண்டை நாடுகளுக்கான பரிசாக, இந்தியாவின் ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ இன்று மாலை விண்ணில் பாய்வதற்கான ’கவுன்ட்-டவுண்’ தொடங்கிவிட்டது.

தெற்கு ஆசியா செயற்கைக்கோள்

இந்தியப் பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி இஸ்ரோ தயாரிப்பில் உருவாகியுள்ளது,  ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’. ஜிசாட்-9 விண்கலத்தின்மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 4.57 மணிக்கு விண்ணில் பாய உள்ளது செயற்கைக்கோள். மூன்று ஆண்டுகளாகத் தயாராகி வந்த இந்த செயற்கைக்கோள், 2230 கிலோ எடையில் 235 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பேரிடர் கால மேலாண்மை, அண்டை நாடுகளுடனான தொடர்களை வளர்த்துக்கொள்ள எனப் பல சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ என்றழைக்கப்படும் ஜிசாட் 9, இந்தியாவைச் சுற்றியுள்ள சார்க் நாடுகளான ஸ்ரீலங்கா, பூட்டான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மற்றும் மாலத்தீவு ஆகியவற்றுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் விலகிக்கொண்டது. தங்களுக்கான செயற்கைக்கோள் திட்டத்தை தாங்களே பார்த்துக்கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது. இந்த செயற்கைக்கோள் திட்டத்தில் தொடர்புடைய அத்தனை நாடுகளும் இயக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close