Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணைகாட்ட எந்த முகாந்திரமுமில்லை! நிர்பயா வழக்கில் 4 பேரின் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனைத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 


டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இரவில் தன் ஆண் நண்பருடன் நின்ற மருத்துவ மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்செய்து, அவரைக் கடுமையாகத் தாக்கி, வீசி எறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இளம் குற்றவாளியான சிறுவன், சீர்திருத்தக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டான். மற்ற ஐந்து பேருக்கும் டெல்லி பெருநகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முக்கியக் குற்றவாளியான ராம்சிங், 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேரும் தூக்குத் தண்டனைக் கைதிகள்.

இதை எதிர்த்து, நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தனர். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, 'அன்று நடந்த சம்பவம் மிகவும் மிருகத்தனமான ஒன்று. குற்றவாளிகளுக்குக் கருணைகாட்ட எந்த முகாந்திரமும் இல்லை. நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடூரமான காயங்கள் மற்றும் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக' நீதிபதிகள் தெரிவித்தனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close