Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுவிலக்கு உள்ள பீகாரில் பிடிபடும் மதுபானம் எங்கே போகிறது... ஷாக் கொடுத்த போலீஸ்!

பீகாரில் நிதிஷ் குமார் தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். மதுவிலக்கு அமல்படுத்தி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், மது விலக்கையும் தாண்டி சட்ட விரோதமாக விற்கப்படும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் அடைத்து வைக்கப்படுகின்றன.

இப்படி அடைக்கப்படும் மதுபாட்டில்களில் இருக்கும் மதுபானத்தை எலிகள் குடித்துவிடுவதாக கூறியுள்ளனர் பீகார் மாநிலத்தின் போலீஸார். இந்த குற்றச்சாட்டில் சந்தேகம் அடைந்த பாட்னாவின் மூத்த போலீஸ் அதிகாரி மனு மகராஜ், இது குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினார். அவர் மேற்கொண்ட திடீர் சோதனையில், இரண்டு காவலர்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே மூக்கு முட்ட குடித்துவிட்டு போதையில் புரண்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் மகராஜ். இந்த சோதனையைப் பற்றிய விபரம் வெளியே கசிய, பணியில் இருக்கும்போதே குடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட காவலரோ, 'மகராஜ் தன்னை தேவையில்லாமல் குற்றம் சுமத்தியுள்ளார்' என்று பகீர் கிளப்பியுள்ளார். 

விஷயம் இப்படியிருக்க, உண்மைத் தகவலை அறிய போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 9 லட்சம் லிட்டர் மதுபானம் பிடிபட்டு, அது காவல் நிலையங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரோ, 'மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வந்ததில் இருந்து குற்றங்கள் குறைந்திருக்கிறது, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது மற்றும் நல்ல உணவுப் பழக்கங்களை மக்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், காவல் நிலையங்களில் நாளுக்கு நாள் குறைந்து வரும் மதுபான பாட்டில்களுக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியவில்லை. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close