Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமித் ஷாவின் தமிழகப் பயணம் திடீரென்று ஒத்திவைப்பு!

 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் இருந்து பி.ஜே.பி காட்டில் மழைதான். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ளது பி.ஜே.பி. இதையடுத்து, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டது பி.ஜே.பி.

Amit Shah


இதனால், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, காஷ்மீரில் இருந்து பயணத்தைத் துவக்கினார். குறிப்பாக, வரும் 10-ம் தேதி சென்னைக்கும், 12-ம் தேதி  கோவைக்கும் அமித் ஷா வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், அமித் ஷாவின் தமிழகப் பயணம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக, தமிழக பி.ஜே.பி அறிவித்துள்ளது. ஆனால், அவரது பயணம் ரத்துசெய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என்று கூறப்பட்டுவரும்நிலையில், அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close