Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவிலேயே பதற்றம் நிறைந்த மாநிலம் இதுதான்!

வன்முறைத் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருவதால், அசாம் மாநிலத்தைப் ‘பதற்றம் நிறைந்த’ பகுதியாக மத்திய அரசு அறிவித்தது.

அசாம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற பல கிளர்ச்சிக் குழுக்களின் தொடர் தாக்குதல்களால், மூன்று மாத காலத்துக்குள் ’ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ பிரிவின் கீழ், ‘பதற்றமடைந்த’ மாநிலமாக அசாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 3-ஆம் தேதியில் இருந்து அசாம் மாநிலமும், மேகாலயாவின் சில எல்லைப் பகுதிகளும் ‘பதற்றமடைந்த பகுதி'யாகும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 2016-ம் ஆண்டில் மட்டும் அசாமில் 75 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 14 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

1990-ஆம் ஆண்டில் இருந்து, பல்வேறு கிளர்ச்சி அமைப்புகளால் தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. இதே காரணத்துக்காக, அருணாச்சலப்பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களை ‘பதற்றம் மிக்க பகுதிகள்’ என அறிவித்துள்ளது மத்திய அரசு.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close