Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு ஊழியர்கள் பாலியல் புகார் தெரிவிக்க புதிய ஏற்பாடு!

மேனகா காந்தி

மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள், தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதுபற்றி இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க விரைவில் வழிவகை செய்யப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் வசதிக்காக, அவர்களுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பின், உயர் அதிகாரிகளிடம் நேரில் புகார் தெரிவிக்க முடியும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்களை உள்ளடக்கிய மகளிர் தீர்வு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற முறையில் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் விவரம் வெளிப்படையாகத் தெரிய வரும்.

ஆனால் இணைய தளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டால், புகார் தெரிவிக்கும் பெண் ஊழியர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாகப் பாதுகாக்க முடியும். எனவே, அத்தகைய இணையவழி புகார் தெரிவிக்கும் வகையிலான வசதி, இதுவரை நடைமுறையில் இல்லை. தற்போது மத்திய அரசு பெண் ஊழியர்கள், இணைய தளம் மூலமாக தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க முடியும் என்று மேனகா காந்தி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் மூலமாக இதுபோன்ற புகார் தெரிவிக்கும் வசதியானது, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள முகவரியில் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என்றும், இதற்காக மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றி வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆன்லைனில் புகார் தெரிவிக்கக்கூடிய வசதியை தொடங்குவதற்கு, மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையத்தின் ஒப்புதலைப் பெற மகளிர் அமைச்சகம் காத்திருப்பதாகவும், அநேகமாக ஒரு மாதத்துக்குள் இந்த ஆன்லைன் சேவை தொடங்கி வைக்கப்படும் என்றும் மேனகா காந்தி கூறினார். ஆன்லைனில் பெறப்படும் இந்தப் புகார்கள், பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.

பல்வேறு அமைச்சகங்களின் கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் இருந்து அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தப் புகார்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்துவது என  மத்திய மகளிர் அமைச்சகம் முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, கடந்த ஒரு ஆண்டாக, மின்னணு முறையிலான புகார் பெட்டி வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், ஆன்லைனில் புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அதே முறையில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார். பெண்கள் தெரிவிக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற புகார்கள் தமது அமைச்சகத்துக்கும் அதிக அளவில் வரப்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நிறுவனமோ அல்லது மத்திய அரசு அலுவலகமோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே கழிவறை பயன்பாடு கூட பாலியல்ரீதியான துன்புறுத்தல்தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களை ஒவ்வொரு அமைச்சகங்களிலும் உள்ள குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பெண்கள் பணிபுரியும் இடங்களில் மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம் என்றார்.

நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியில் சுமார் 30 லட்சத்து 87 ஆயிரம் பெண் ஊழியர்கள் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கும் பெண் ஊழியர்கள் கூட, இதுபோன்ற ஆன்லைன் மூலமான வசதி இருப்பின் தைரியமாக தங்கள் புகாரைத் தெரிவிக்க முன்வருவார்கள். வேறு சிலர், புகார் தெரிவித்தால், தங்களுக்கு அது தேவையற்ற விளைவை ஏற்படுத்தும் என்பதால், வெளியே தெரிவிக்காமல் தங்களுக்குள்ளே வைத்து புழுங்கி விடுவதும் உண்டு. வேறு சிலரோ எப்படி புகார் தெரிவிப்பது, தங்களுக்கு மேல் அதிகாரி ஆயிற்றே, நாம் புகார் தெரிவித்தால், பணியில் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்லாமல் விட்டு விடுவதையும் காண்கிறோம். ஆனால், ஆன்லைன் மூலமாக புகார் செய்யும் வசதி எனில், பெண் ஊழியர்களுக்கு மிகவும் வாய்ப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதேபோன்ற நடைமுறையை தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தினால், தனியார் துறையில் உள்ள மகளிரும் பயன்பெறுவார்கள் !

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close