Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500 கோடி ரூபாய் கேட்டு விப்ரோ நிறுவனத்துக்கு ஈமெயில் மூலம் மிரட்டல்

500 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டி விப்ரோ மென்பொருள் நிறுவனத்துக்கு  மர்ம ஈ-மெயில் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து விப்ரோ நிறுவனம் பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளது. 


விப்ரோ மென்பொருள் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தற்போது அந்த நிறுவனத்துக்கு ஈ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.  500 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்று அந்த ஈ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பணம் செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட இணையதள இணைப்பையும் அந்த ஈ-மெயிலுடன் அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட பணத்தை தரவில்லை என்றால் இயற்கை நச்சு அல்லது ரிசின் போன்ற நச்சை  உணவகங்களிலோ அல்லது குடிநீர் குழாய் வழியாகவோ அனுப்பப்படும் என்றும் ஒரு சில நாள்களில் ஏதேனும் ஒரு விப்ரோ அலுவலகத்துக்கு இரண்டு மூன்று கிராம் ரிசின் அனுப்பிவைக்கப்படும். இந்த மிரட்டலை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம் இதுகுறித்து பெங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்த வழக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close