Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுக்மா தாக்குதல் : நக்சலைட்டுகள் கைது!

சுக்மா தாக்குதலில் ஈடுபட்ட நக்சலைட்டுகள் உட்பட 19 நக்சலைட்டுகளை இன்று நடந்த அதிரடி சோதனையில், சட்டீஸ்கர் போலீஸார் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.

நக்சலைட்டுகள் கைது

சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீஸாரும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரகளும் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையில் 19 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த இக்கூட்டுப்படை நடவடிக்கையில் கடந்த வார சுக்மா ராணுவத் தாக்குதலில் ஈடுபட்ட 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டீஸ்கர் மாநில கூடுதல் ஆணையாளர் தெரிவித்தார்.

ராணுவத் தாக்குதல்கள், கடத்தல், அரசுக்கு சேதாரம் ஏற்படுத்தியது எனப் பல குற்றங்களை விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக மத்திய ரிசர்வ் படை போலீஸார் தெரிவித்தனர். இவர்களை தாந்தேவாடா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். தற்போது மேலும் 10 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுளதாக சட்டீஸ்கர் போலீஸார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் - மத்திய ரிசர்வ் படை போலீஸார் இடையே நடந்த தாக்குதலில் 25 ரிசர்வ் படை வீரர்கள் மரணமடைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close