Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல்துறை அத்துமீறலை அம்பலமாக்கிய அதிகாரிக்கு நேர்ந்த அநியாயம்!

சத்தீஸ்கரில் பழங்குடியின பெண்கள் துன்புறுத்தப்படுவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வர்ஷா

சத்தீஸ்கரில் சமீபத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பல சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது. இதனிடையே தாக்குதல் சம்பவம் குறித்து சத்தீஸ்கர் சிறை அதிகாரி வர்ஷா டோங்ரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அதில், 'அதிகாரவர்க்கம் பழங்குடியின பெண்களை துன்புறுத்துகின்றனர். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் கூட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கின்றன. இதற்கு நானே சாட்சி' என அவர் பதிவிட்டார்.

இதையடுத்து வர்ஷாவின் ஃபேஸ்புக் பதிவுக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறை துறை டி.ஜி.பி கிரிதர நாயக் கூறுகையில், 'சிறைத்துறை அதிகாரிகளின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக அவர் நடந்துக் கொண்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்' எனக் கூறியுள்ளார். இந்நிலையில், பழங்குடி மக்களின் குடிசைகளுக்கு தீ வைப்பது, அப்பாவி பெண்களை கற்பழிப்பது உள்ளிட்ட சம்பவங்களும் நடப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close