Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்திய விவகாரம்... அதிரவைத்த ஆர்.டி.ஐ பதில்!

Modi in ads

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'ஜியோ' முதன்முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது, இந்திய அளவில் உள்ள அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் ஒரு முழுப் பக்க விளம்பரத்தைக் கொடுத்திருந்தது ஜியோ நிறுவனம். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.  பிரதமரின் படம் ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பயன்படுத்திய செயல் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களால் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, பேடியம் நிறுவனம், ஜியோ செய்தது போலவே பிரதமரின் புகைப்படத்தை உபயோகித்து விளம்பரம் செய்திருந்தது. இந்தச் செயல்கள் பரவலாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் மத்திய அரசு சில நாள்கள் மௌனம் காத்தது.

பின்னர், இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், 'பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்கு இரண்டு நிறுவனங்களும் வருத்தம் தெரிவித்தன' என்று கூறப்பட்டது.

இந்நிலையில், 'பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு யாரால் அனுமதி அளிக்கப்பட்டது?' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு, 'யாரால் பிரதமரின் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவலை கூற முடியாது. அதைக் கண்டுபிடிக்க முழுமையான சோதனை நடத்தப்பட வேண்டும்.' என்று பதில் கூறப்பட்டிருப்பது, அனைவரையும் அதிரவைத்துள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close