Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வடகிழக்கு இந்தியாவை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயில் ஆக்குவோம்’: மோடி

வடகிழக்கு மாநிலங்கள் பல்வேறு தளங்களிலும் வளர்ச்சியில் குறைந்தே காணப்படுவதால் விரைவில் முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயில் ஆக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மோடி


சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் இந்நாள் வரையிலும் வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளன. இதனாலேயே வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், சிறந்த கட்டமைப்புப் பணிகள், நீடித்த வளர்ச்சி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு ‘தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயில்’ எனப் பெயரெடுக்கும் வகையில் வடகிழக்கு இந்தியா மாற்றப்படும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதற்கட்டமாக வடகிழக்கு இந்திய மாநிலங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருவாயை அதிகரிக்கவும், வடகிழக்கு மாநிலங்களை ‘உதான்’ திட்டத்தில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒருவித ஒற்றுமை ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close