Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை அழ வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  கோரக்பூர் நகரின் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராதா மோகன் தாஸ் அகர்வால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


கோரக்பூர்ப் பகுதியில் உள்ள கொய்ஹ்வா கிராமத்தில் நேற்று மதியம் பெண்கள் சிலர் ஒன்று திரண்டு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது  விற்பனை நடைபெறுவதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோரைக்  காவல்துறையினர் கலைத்தனர். அப்போது, அந்த இடத்துக்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. ராதா மோகன் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாரு நிகம் என்பவரை சரமாரியாகத் திட்டியுள்ளார். ”உன் எல்லையை மீறி நடந்துகொள்ளாதே” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் அதிகாரி அழத்தொடங்கிவிட்டார். 

ips cried

 

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த  ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துவிட்டார். நெட்டிசன்ஸ் ராதா மோகனை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது இந்தச் சம்பவம் குறித்து ராதா மோகன் தாஸ் விளக்கமளித்துள்ளார். “நான் அந்தப் பெண் போலீஸிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை. அந்தப் பெண் போலீஸ் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்மீது லத்தி சார்ஜ் செய்துள்ளார். அதனால்தான் அவரைக் கண்டித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close