Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவத்துக்கு 1 கோடி வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தம்பதி!

னிதர்களுக்கு சேமிப்பு மிக முக்கியம். ஓய்வுக்குப் பிறகு, தளர்ந்து போகும் காலத்தில் மீதி நாளைக் கழிக்க ஆதாரமாக இருப்பது சேமிப்புதான். கடைசிக் காலத்தில் உதவும் 'விலை மதிப்பில்லா சேமிப்பு  ஒரு கோடி ரூபாயை குஜராத்தைச் சேர்ந்த தம்பதி, ராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ராணுவத்துக்கு கோடி ரூபாய் நன்கொடை

அண்மையில், நாட்டில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் மக்களை வெகுவாக பாதித்திருந்தன. சட்டீஸ்கரில் நக்ஸலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா எல்லை பாதுகாப்புப் படையினர் இருவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றதோடு மட்டுமல்லாமல் , தலையையும் கொய்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி 250 மீட்டர் உள்ளே வந்து பாகிஸ்தான் ஸ்பெஷல் டீம் ஃபோர்ஸ் இந்திய வீரர்களின் உடலில் இருந்து தலையை கொய்ததாக சொல்லப்படுகிறது. இந்திய எல்லையில் கண்ணிவெடிகளையும் பாகிஸ்தான் வீரர்கள் புதைத்து சென்றுள்ளனர். தற்போதுதான், இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. 

இந்திய வீரர்களின் தலை கொய்யப்பட்டது,  நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'மோடியின் ஆட்சியை மக்கள் குறை கூறி வருகின்றனர். அதேவேளையில், சாதாரண மக்கள் முதல் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வரை நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்துக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். பலியான 25 வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவை கௌதம் கம்பீர் ஏற்றுக் கொண்டுள்ளார். நடிகர் அக்ஷய் குமார் தனி ஆப் உருவாக்கி, அதன் மூலம் நிதி திரட்டி வருகின்றார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்- ஐபிஎஸ் தம்பதி, பாகிஸ்தான் ராணுவத்தால் தலை கொய்யப்பட்ட வீரர் பரதம்ஜீன் சிங்கின் 12 வயது மகளை தத்தெடுத்துள்ளனர்.

பலதரப்பட்ட மக்களும் தங்களால் முடிந்த உதவியை பலியான வீரர்களின் குடும்பத்துக்கு செய்து வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த முதிய தம்பதி செய்த காரியம் நாட்டு மக்களை நெகிழ வைத்துள்ளது. பவாநகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன பட். எஸ்.பி.ஐ வங்கியில் கிளார்க் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது, இவருக்கு 84 வயதாகிறது. தான் பணியில் இருந்தபோது, பல்வேறு மியூச்சுவல் ஃப்ண்ட்களில் முதலீடும் செய்திருந்தார். ஓய்வின்போது கிடைத்த பி.எஃப் பணம் எல்லாம் சேர்த்து ஒரு கோடி ரூபாய் அவரது சேமிப்பில் இருந்தது.

நக்ஸலைட்டுகளால் வீரர்கள் கொல்லப்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்களின் தலையை கொய்தது, ஜனார்த்தன பட்டின் மனதை பாதித்தது. ராணுவ வீரர்களுக்கு உதவ நினைத்த அவர், சேமிப்புத் தொகை ஒரு கோடியை இந்தியா பாதுகாப்புத்துறை நிதிக்கு வழங்கியுள்ளார். 

இது குறித்து ஜனார்த்தன பட் கூறுகையில், ''சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது; பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவ வீரர்களின் தலையை கொய்தது என்னை மனதளவில் பாதித்திருந்தது. இதனைத் தொடர்ந்தே எனது சேமிப்பை பாதுகாப்புத்துறைக்கு நிதியாக வழங்க முடிவு செய்தேன். எனது முடிவுக்கு எனது மனைவியும் சம்மதித்தார்'' என்கிறார். 

 ஜனார்த்தன பட்டை பற்றி தெரிந்தவர்கள், சமூகத்தின் மீது அவர் மிகுந்த அக்கறைக் கொண்டவர் என்கின்றனர். ''வங்கி ஊழியராக இருந்த போது, யூனியன் தலைவராக இருந்து பல தரப்பினருக்கும் உதவிக்கரமாக இருந்தவர் என்றும் 54 லட்ச ரூபாய் வரை நிதி திரட்டி பலருக்கும் உதவி செய்தார்'' எனவும் அவரை  அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

மனிதர்களுக்குத்தான் சேமிப்புத் தேவை... மாமனிதர்களுக்கு கடவுள் துணை நிற்பார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close