Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’முழு மதுவிலக்கு'... தள்ளாடிய துணை முதல்வரின் மகன்... நெருக்கடியில் குஜராத் அரசு! 

குஜராத் மாநில துணை முதல்வரின் மகன், மது அருந்திவிட்டு விமான நிலையம் வந்ததால், விமானத்தில் பயணிக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

Gujarat

 

குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு தற்போது, விஜய் ரூபானி தலைமையிலான   பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.  குஜராத்தின் துணை முதல்வராக நிதின்பட்டேல் இருக்கிறார். அவரின் மகன் ஜெய்மின் பட்டேல், ரியல் எஸ்டே் புரொமோட்டராக உள்ளார்.
ஜெய்மின் பட்டேல், தன் குடும்பத்துடன் கோடை விடுமுறையைக்  கொண்டாட, கிரீஸ் நாட்டுக்கு செல்லத்  திட்டமிட்டிருந்தார். இதற்காக, கத்தார் ஏர்லைன்ஸில் விமான முன்பதிவுசெய்திருந்தார்.

நேற்றிரவு, குடும்பத்துடன் அகமதாபாத் விமான நிலையம் வந்த ஜெய்மின், அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. நடக்கக்கூட முடியாத அளவுக்கு மது அருந்தியிருந்ததால், வீல்சேரில் அமரவைத்து விமான நிலையத்துக்கு அழைத்துவந்தனர். 

ஜெய்மின் பட்டேல் மது அருந்தி இருப்பதால், அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஜெய்மின் குடும்பத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. துணைமுதல்வரின் மகனாக இருந்தாலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இதனால், ஜெய்மின் குடும்பத்தினர் கிரீஸுக்குப் போக முடியாமல் வீடு திரும்பினர். மது விலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close