Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்மல்லையாவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜூன் 10-ம் தேதி நேரில் ஆஜராக விஜய்மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் வரை கடன்வாங்கிய விஜய்மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தலைமறைவாக இருந்துவருகிறார். இதனையடுத்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சிசெய்துவருகிறது. இந்த நிலையில், வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக விஜய்மல்லையா மீது வங்கிகள் சம்மேளனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், 'சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்' என்று விஜய்மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில், விஜய்மல்லையாவும் அவருடைய சொத்து தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்தார். 'விஜய்மல்லையா அளித்த ஆவணங்கள் போலியானவை. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறோம்' என்று வங்கிகள் சம்மேளனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய்மல்லையா குற்றவாளி' என்று அறிவித்தனர். மேலும், 'இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 10-ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close