Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கேட்டார்’: கெஜ்ரிவால் மீது அடுத்த புகார்!

’ஆம் ஆத்மி’ தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீது மற்றொரு எம்.எல்.ஏ. லஞ்சம் கேட்டதாகப் புகாரளித்துள்ளார்.

கெஜ்ரிவால்


டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது சில நாள்களுக்கு முன்னர் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டுமொரு எம்.எல்.ஏ. ஊழல் புகார் தெரிவித்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. அசிம் அகமது கான். இவர் கூறியுள்ள குற்றச்சாட்டில், ‘கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இருந்தபோது அவர் கேபிள் டிவி ஒன்றினை தொடங்குவதற்காக என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கேட்டபோது நான் மறுத்ததால் பொய்க் குற்றச்சாட்டில் என்னைக் கட்சியை விட்டே நீக்கிவிட்டனர்’ என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close