Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கெஜ்ரிவாலுக்கு எதிராக போராடவும் தயங்க மாட்டேன்' - அன்னா ஹசாரே அதிரடி..!

லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு எதிராக, போராட்டத்தில் இறங்குவேன் எனக் கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா அண்மையில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டினார். 2 கோடி ரூபாயை கெஜ்ரிவால் வாங்கியதை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து டெல்லி அரசியல் சூழல் பரபரப்பானது. கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் மனமுடைந்து போயிருப்பதாக அன்னா ஹசாரே கூறியிருந்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் போராடுவேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று டெல்லியில் பேசிய அவர்,' கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' எனக் கூறியுள்ளார். மேலும் 'என்னிடம் போதிய ஆதாரங்கள் இருந்தால் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன்' எனக் கூறியுள்ளார். மேலும், குற்றம் சுமத்தியுள்ள கபில் மிஷ்ரா தனது பதவி பறிக்கப்பட்ட பின் இவ்வாறு பேசுவது சந்தேகத்துக்கு இடமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close