Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா வந்தார் ஜஸ்டின்  பீபர்... இசை மழையில் நனையத் தயாராகும் மும்பை!

இந்தியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்த, சர்வதேச பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மும்பை வந்துள்ளார்.


மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில், ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியின் ஆரம்பநிலை டிக்கெட் 4,000 ரூபாய். இந்தியாவில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தப்போகும் ஜஸ்டினுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சி நடைபெறப்போகும் இடத்தில் 500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜஸ்டினின் இந்த இசை நிகழ்ச்சிக்காக, 4 மில்லியன் டாலர் முதலீடுசெய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Justin Beiber
 

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பிரபல பாதுகாவலர், ’ஷெரா’, தற்போது ஜஸ்டின் பைபரின் அதிகாரபூர்வ பாதுகாப்புப் பொறுப்பு பெற்றுள்ளார். மும்பை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா என  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம் ஜஸ்டின் !

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close