Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தி கத்துக்கிட்டா லிவருக்கு நல்லது..!' - எஸ்.வி.சேகரும், யதார்த்தமும்! #WednesdayVerithanam

'இந்தி கத்துக்கிட்டா வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்' என எஸ்.வி.சேகர் சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கெனவே, 'சரவணபவனில் தோசை சாப்பிடவேண்டும் என்றாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்' எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியவர்தான். முன்னேற்றத்துக்கு இந்தி அவசியம் எனச் சொல்லும் இவர்களிடம் 'அப்புறம் ஏன் இந்தியையே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் தமிழ்நாட்டை விடப் பின்தங்கி இருக்கின்றன?' எனக் கேள்வி கேட்டால் மண்டையைச் சொறிவார்கள். 

இந்தி கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொல்றது பத்தாவதுல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தா வாழ்நாள் முழுக்கக் கவலை இல்லாமல் வாழலாம்னு சொல்றதுக்குச் சமமானது. தேவைன்னு அவங்கவங்களுக்குத் தோணுச்சுனா தானே கத்துக்கப் போறாங்க... அதை விட்டுட்டு மைல்கற்களில் இந்தியில் எழுதுறது, படிச்சே ஆகணும்னு கட்டாயப் படுத்துறதுலாம் தேவையே இல்லாத ஆணிகள் மொமென்ட்தான். 'முப்பதே நாள்களில் அழகாகப் பேசலாம் மலையாளம்' புத்தகத்தை வாங்கிப் படிச்சு லவ் ப்ரொபோஸ் செய்ற தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா..? 

எஸ்.வி.சேகர் - இந்தி

உண்மையில் நாம் கற்றுக்கொள்ளும் இந்தி எதற்குப் பயன்படும்னு ஜாலியா ஒரு பார்வை... 
'மேரே நாம் கியா ஹை?' ங்கிற மாதிரியான ஒண்ணு ரெண்டு வாக்கியங்களை மட்டும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு வடமாநிலத்தினரோடு சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் நமக்கு, 'ஏக் காவ் மே ஏ கிசான் ரகு தாத்தா...'னு யாரோ ஒரு நண்பனின் தாத்தாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. 

பானி பூரி, பேல் பூரி கடைகளில் இந்தியில் பேசினால், கடைக்காரருக்கும் நமக்கும் 'ஏக் துஜே கேலியே'வாகி ஒரு கூட்டுக் கிளிகளான பந்தபாசத்தில் ஒண்ணோ ரெண்டொ பூரிகள் எக்ஸ்ட்ராவாக கிடைக்க வாய்ப்புண்டு. 

வெளிமாநிலங்களுக்கு வேலை தொடர்பாகப் போகும்போது மைல் கற்களைப் பார்த்து 'திருமலை' விவேக் போல 'என்னடா இது ஜிலேபிய பிச்சுப் போட்ட மாதிரி இருக்கே...'னு பதறத் தேவையில்லை. ஏரியா பெயரைப் படிச்சுப் பார்த்து கப்புணு கண்டுபிடிச்சு சரியான பாதையில் பயணிக்கலாம். டேக் டைவர்சன் எடுத்தாலும் இன்டர்வியூவுக்கு சரியான நேரத்துக்குள் போயிடலாம். 

வடமாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகத்துக்கு வந்து மேடைகளில் பேசும்போது கூடவே ஒருவர் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பார். எல்லோரும் இந்தி கற்றுக் கொண்டால் அந்த மொழிபெயர்ப்பு செய்யும் அரசியல்வாதி மூச்சைப் போட்டுப் பேசத் தேவையிருக்காது. 

டெல்லிக்குப் போனால் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் சுற்றிப் பார்த்துவிட்டு ரயிலைப் பிடிக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு கொஞ்சம் அவ்வப்போது சாலைகளிலும் உலாவலாம். இந்திக்காரர்களிடம் அட்ரஸ் விசாரித்து லோக்கல் பார்க்குகளைச் சுற்றிப் பார்க்கலாம்.  

எல்லோரும் இந்தி கத்துக்கிட்டா, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தங்களது தொகுதி மக்களுக்காகப் பேசுறாங்களா இல்லை கட்சி வளர்ச்சிக்காகப் பேசுறாங்களாங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடும். இது நாட்டின் வளர்ச்சிக்கே வழி வகுக்கும். அப்புறம் அடி மடியிலேயே கை வெச்சுட்டாய்ங்களேனு எம்.பி.க்களும் இந்தித் திணிப்பை எதிர்க்க ஆரம்பிச்சுடுவாங்க.

'இந்தி ஹமாரா ராஷ்ட்ரிய பாஷா...' னு தொண்டை வறழக் கத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை நம்பும் நம்ம ஆட்களும்  'இப்படித்தான் நான் ஒருமுறை மும்பைக்குச் சென்றேன்... அங்கே இந்தி தெரியாமல் நான் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...' என கண்ணீரும் கம்பலையுமாகக் கதைசொல்ல மாட்டார்கள். #முடியலைன்னா சும்மா இரு... 

இந்தி டப்பிங் சீரியல் ரசிகைகள் நேரடியா இந்தி சீரியல்களையே பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. வாய் ஒரு பக்கம் போக, வார்த்தை ஒரு பக்கம் போக கஷ்டப்பட்டு லிப் சிங் பண்ற வேலை மிச்சம். இந்திப் படங்கள் தமிழக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, அப்புறம் விஷால் மத்திய அரசுக்கு மேலும் ஒரு கோரிக்கையை வைப்பார். 

கடைசியா ஒண்ணு... ஹாங் ஜி... இந்தி கத்துக்கிட்டா லிவருக்கு நல்லது. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close