Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது?

ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜூம் ஜைதி அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதுதொடர்பாக, தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்தும் முடிவில் ஒற்றுமையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பா.ஜ.க இந்த முறை தனியாகவே வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டவற்றில் பாஜக ஆளும்கட்சியாக இருக்கும் நிலையில் பாஜக அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்துடன் இருந்து வருகிறது.

இருப்பினும் தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறும் அளவுக்கு பெரும்பான்மை இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜக அனைத்து தரப்பினரின் வாக்குகளையும் பெறுவதற்காக அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தியது. எனவே இந்த முறையும் அனைத்து தரப்பினரிடமும் ஆதரவும் இருக்கும் ஒரு வேட்பாளரை பாஜக நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அடுத்த மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜூம் ஜைதி அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close