Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது! - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சைக் கருத்து

ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா அரசின் முக்கியத் தலைவரும் மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான காளிச்சரண் சாரப்தான்,  'பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது!' என்ற சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாலியல் கொடுமைக்குள்ளான ஒரு குழந்தையைப் பார்க்க வந்த காளிச்சரணை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, பா.ஜ.க அரசில் குற்றங்கள் அதிகரித்துவருவதாக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டுவதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் காளிச்சரண், 'ஒரு நகைக்கடைக்காரர் வீட்டிலுள்ள வேலைக்காரர், அந்த வீட்டிலுள்ள சிறு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினால், அதை அரசினால் தடுக்க முடியாது. காரணம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு போலீஸை அரசினால் வேலைக்குப் போட முடியாது. குற்றம் நடந்தது தெரியவந்தால், சட்டப்படி மட்டுமே அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும்' என்றவர், 'காங்கிரஸ் அரசு காலத்தில் பாலியல் குற்றங்களே நடக்காமல் இருந்ததா?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சச்சில் பைலட், 'ஒரு மாநில அமைச்சர், தன் பதவிக்குரிய பொறுப்புடன் பேச வேண்டும். இப்படி மோசமான உதாரணங்களுடன் பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது. மாநில அரசு உடனடியாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முன் வர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close