Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இந்திய வலிமையை உலகுக்கு உணர்த்திய பொக்ரான் அணுச் சோதனை’: மோடி பெருமிதம்!

இந்திய நாட்டின் வலிமையை உலகுக்கு உணர்த்திய ‘பொக்ரான் அணு சோதனை’ நடத்தப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இச்சிறப்புமிகு சாதனையால் இந்தியா பெருமைகொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொக்ரான் சோதனை


’பொக்ரான் அணு சோதனை’ 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனத்தில் மே மாதம் 11-ம் நாள் சோதிக்கப்பட்டது. இந்நாளை, ’தேசிய தொழில்நுட்ப தினம்’ ஆக இந்தியா கொண்டாடிவருகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியிலிருந்தபோது இந்தச் சோதனை நடைபெற்றது. இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த இந்தச் சாதனையை மனவலிமையுடன் நிகழ்த்திக்காட்டிய வாஜ்பாயை மோடி புகழ்ந்து, ட்விட்டரில் கருத்து பதிந்துள்ளார்.

மோடி


தன் ட்விட்டர் செய்தியில் மோடி அறிவித்திருப்பதாவது, ‘அனைவருக்கும் வாழ்த்துகள். தேசிய தொழில்நுட்ப தினமான இன்று, எங்களின் திறமைமிகு விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப ஆர்வம் நிறைந்தோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘1998-ம் ஆண்டின் பொக்ரான் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளுக்கும் சிறந்த அரசியல் தலைமைக்கும் நன்றியுடன் இருப்போம்’ என வாஜ்பாய் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கே தெரியாமல், அமெரிக்காவின் கழுகுப் பார்வையிலிருந்தும் தப்பி, பொக்ரான் அணு சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியதால், 1999-ம் ஆண்டிலிருந்து மே 11-ம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close