Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஒரு லட்சம் கோடி ரூபாய்...’: பாபா ராம்தேவின் புதிய பட்ஜெட் எதற்காக?

'அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலியின் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாக உயரும்போது, அந்தப் பணம் கல்விக்காகவும் சமூக சேவைகளுக்கும் செலவுசெய்யப்படும்’ என, பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ்

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த நிதியாண்டில் மட்டும் 10,561 கோடி ரூபாய் லாபம் எட்டியுள்ளது. இந்த வருவாய், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிக்கும் என்பதால், பெறக்கூடிய லாபத்தை சமூகத் தொண்டுகளுக்காக செலவுசெய்யப்படும் என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் ராம்தேவ்.

’இந்தியாவில் செயல்படும் பல வெளிநாட்டு நிறுவனங்கள், சமூகத்துக்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், நாங்கள் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக எங்களது 100சதவிகித லாபத்தையும் தருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இந்தப் பணத்தை, அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு கல்வி உள்ளிட்ட சமூகப் பணிகளுக்கு செலவிட முடிவுசெய்துள்ளோம்’ என அறிவித்துள்ளார்.

அடுத்ததாக, குஜராத்தில் ‘பசு ஆய்வு மையம்’ ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்,  அதன்மூலம் ஒரு நாளைக்கு 5 லிட்டரிலிருந்து 50 லிட்டர் வரை பால் பெறும் அளவுக்கு திட்டம் செயல்படும் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close