Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர் தேடி அலைந்த 16 குரங்குகள் தண்ணீர்த் தொட்டிக்குள் உயிரிழந்த பரிதாபம்!

கர்நாடாகாவில், தாகம் தீர்த்துக்கொள்ள தண்ணீர்த் தொட்டியைத் தேடிச்சென்ற 16 குரங்குகள், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

monkeys died

 

கர்நாடகாவில், ராய்ச்சூர் நகர் அருகே கெடார் என்னும் கிராமம் உள்ளது. அங்கு கட்டுமானப்பணி நடந்துகொண்டிருக்கும் ஓர் இடத்தில்,     16 குரங்குகளின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து பின்வரும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவிவருகிறது. நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு கூட்டமாக குரங்குகள் வந்துள்ளன. அங்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏறிச் சென்றுள்ளன. நீர்த்தேக்கத் தொட்டிக்குள் தண்ணீர் இல்லை. தண்ணீர் தாகத்தில் மயக்க நிலையிலிருந்த குரங்குகளால், தொட்டிக்குள்ளிருந்து மேலே ஏற முடியவில்லை. எனவே, மூச்சுத் திணறி 16 குரங்குகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. நீர்த்தொட்டி பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் மேலே ஏறிப் பார்த்தபோது, குரங்குகள் இறந்துகிடந்துள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close