Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎல் பெட்டிங் : கான்பூரில் மூன்று பேர் கைது..!

ஐபிஎல் தொடர் என்றாலே பெட்டிங் சம்பவங்களும், ஆங்காங்கே நடப்பது இயல்பாகி விட்டது. ஒரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நேரத்தில், மறுபக்கம் பெட்டிங் சம்பவங்களும் நடந்து வருகின்றன. நேற்று குஜராத்-டெல்லி அணிகள் மோதிய போட்டி கான்பூரில் நடந்தது.

arrested


அப்போது பெட்டிங்கில் ஈடுபட்ட மூன்று பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர். குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர், வீரர்கள் தங்கியிருந்த, 5 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்கியுள்ளனர். நயன் ஷா, விகாஷ் சவுகான், ரமேஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள் மற்றும் 4.90 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிசிசிஐ விஜிலென்ஸ் மற்றும் உத்தரப்பிரதேச மாநில குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய ரெய்டில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக கைது செய்யப்பட்டுள்ள ஷா என்பவர், நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் வைத்துள்ளாராம். விரைவில் இந்த சம்பவம் குறித்து பிசிசிஐ செய்திக் குறிப்பை வெளியிட உள்ளது. இந்த சம்பவத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close