Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்... தேர்தல் ஆணையத்துக்கு சவால்விட்ட ஆம் ஆத்மி!

Arvind kejriwal

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. குறிப்பாக, டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலுமு பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி, 'சமீப காலமாக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது. அதை நாங்கள் நிரூபிக்கத் தயார்' என்று கூறியது. 

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பொதுத் தளங்களில் நிறைய வாக்குவாதங்கள் நடந்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி, 'அனைத்து கட்சிகளும் இருக்கும் ஒரு குழுவை அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்துகிறோம். அதில், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதித்துவமும் இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் எங்கள் நிபுணர் குழு எப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஊடுருவி ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும்படி செய்யமுடியும் என்பதை காட்டுவோம்' என்று சவால் விடுத்துள்ளது. 

மேலும், 'இனிமேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளதா என்று நாம் பேசத் தேவையில்லை. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் முறைப்படி நடந்தனவா என்பதை மட்டும்தான் பேச வேண்டும்' என்று காட்டமாக கூறியுள்ளது ஆம் கட்சி தரப்பு. 

இதற்கு, தேர்தல் ஆணையம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close