Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கக்கூஸைக் காணோம்' - காவல் நிலையத்தில் புகார்செய்த பெண்கள்

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் அருகேயுள்ள அமர்பூர் கிராமத்தில் வசிக்கும் 75 வயதான தாயும் அவரது மகளும், தங்களது கழிவறையைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பெலா பட்டேல் என்கிற அந்த மூதாட்டி, தன் வீட்டில் கழிவறை இல்லை என்பதால் 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் கட்டித் தரவேண்டி கிராம பஞ்சாயத்துக்கு மனு செய்திருக்கிறார். ஆனால், ஏற்கெனவே பஞ்சாயத்து  சார்பில் கழிவறை  கட்டிக் கொடுத்துள்ளதாகப் பதில் வந்துள்ளது.  இந்தப் பதிலைக் கண்டு ஆச்சர்யமடைந்த பாட்டிக்கு பின்னர்தான் தன் பெயரை வைத்து அதிகாரிகள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

'100 சதவிகிதம் கழிவறைகள்கொண்ட பகுதியாக, பெந்தரா பகுதி கடந்த நவம்பரில் 'ஸ்வச் பாரத்' திட்டத்தால் அறிவிக்கப்பட்டது. கிராம சபை என் வீட்டில் கழிவறை கட்டியுள்ளதாக ஆவணங்கள் வைத்துள்ளது. அந்தக் கழிவறையைக் காணவில்லை. ஒரு வேளை யாராவது திருடிச் சென்றிருக்கலாம்' என்று காவல் நிலையத்தில் பெலா பட்டேலும் அவரது மகளும் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். 

'இப்படி தவறான ஆவணங்களை உருவாக்கி, மக்களின் பணத்தை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருடுவது தெரிந்தாலும், யாருமே இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. இந்த பாட்டிதான் முதல்முதலாக பூனைக்கு மணிகட்டியதைப் போல செயல்பட்டுள்ளார்' என பெயர் சொல்ல விரும்பாத செயல்பாட்டாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அமர்பூர் காவல் நிலைய அதிகாரி நிக்கோலஸ் இது குறித்து தெரிவிக்கையில், 'முதலில் புகாரைப் பார்த்தவுடன் இவர்கள் ஏதோ நக்கல் செய்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், பெலா பட்டேலும் அவரது மகள் சந்திரா பட்டேலும் முறைப்படி தங்கள் வீட்டில் கழிவறைக்  கட்டியுள்ளதாகக் கூறும் அரசு ஆவணங்களின் நகல்களோடுதான் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அமர்பூர் பஞ்சாயத்துத்  தலைவி சாவித்ரி தேவி, 'தனித்தனியாக கழிவறைகளைக் கட்டி அதற்கான பணத்தை ஒதுக்க முடியாது என்பதால், பத்து வீடுகளுக்கும் சேர்த்து ஒதுக்கிவருகிறோம். அதற்குள் இவர்கள் அவசரப்பட்டுவிட்டார்கள். விரைவில், இருவருக்கும் கழிவறைகள் அமைத்து தருவோம்' என்று தெரிவித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close