Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐடி ஊழியர்கள் யாரையும் நீக்கப்போவதில்லை, ஆனால்...' - டிசிஎஸ் நிர்வாகம் அதிரடி!

TCS

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், எப்போதுமில்லாத அளவில் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்தியாவின் மற்றொருமுன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் என்கிற டாடா கன்சல்டன்ஸி, ஆட்களைக் குறைக்கப்போவதில்லை என்றும், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

12 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், இந்த ஆட்குறைப்புத் தகவல்களால் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றங்கள், இந்த நிறுவனங்களில் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகின்றன.

நேற்று, பாட்டாவில் புதிய பிபிஓ அலுவலகத் திறப்புவிழாவில் கலந்துகொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஸ் கோபிநாத்திடம் இந்த ஆட்குறைப்புகுறித்து கேட்கப்பட்டது. 'கண்டிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்காது. நாங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவே இருக்கிறோம். இருப்பவர்களை வெளியேற்ற அல்ல' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டாட்டா கன்சல்டன்ஸியின் செய்தித்தொடர்பாளர்  பிரதிப்தா பக்‌சி, 'டிஜிட்டல் இந்தியா சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் இன்னும் எங்கள் தொழிலை விரிவுசெய்து அதிக நபர்களை இணைத்துக்கொள்ள இருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close