Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதி கர்ணனின் கோரிக்கை நிராகரிப்பு! தேடுதல் வேட்டையில் போலீஸ்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்ணன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 6 மாதம் சிறைத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்யுமாறு மேற்கு வங்காள போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கர்ணன் தலைமறைவாகிவிட்டதால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதனிடையே, கர்ணன் மீது விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

தன் மீதான தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறியதையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து கொல்கத்தா காவல்துறையினரால் கர்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close