Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனி வரும் தேர்தல்களில் ஒப்புகைச்சீட்டு வசதி' - தேர்தல் ஆணையம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டி வந்தது. இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், டெல்லி சட்டப்பேரவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று ஆம்ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் நிரூபித்தார்.

Nasim Zaidi

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு வந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.


இந்தக் கூட்டம் இன்று நடந்தது. இதில், ஏழு தேசியக் கட்சிகள், 48 பிராந்தியக் கட்சிகளைச் சேர்த்து, 55 கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில், தேர்தலின்போது பழைய வாக்குச்சீட்டு முறையை கைப்பற்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டது.


இந்தக் கூட்டத்துக்குப்பின் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தலில் பழைய வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படாது. ஆனால், மின்னணு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வரும் வசதி, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும். வருகின்ற 14-ம் தேதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த, செயல் விளக்கக் கூட்டம் நடக்கிறது. அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close