Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முத்தலாக்... திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மிக மோசமான முறை!' - உச்ச நீதிமன்றம் கறார்

Supreme court

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 பேர்கொண்ட நீதிமன்ற அமர்வு முத்தலாக் தொடர்பான வழக்கை இன்று விசாரித்தது. அப்போது, 'முஸ்லிம்களின் திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர நடைமுறையில் இருக்கும் மிக மோசமான முறை முத்தலாக்' என்று கறாராக கூறியுள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.

மேலும், 'முத்தலாக் சகித்துக்கொள்ளும் நடைமுறை இல்லை என்றாலும், சிலர் அதை சட்ட நடைமுறைக்கு உட்பட்டதுதான் என்கின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முத்தலாக் முறை பின்பற்றப்படுவதில்லை. எந்தெந்த முஸ்லிம் நாடுகளில் எல்லாம் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலை தயாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது நீதிமன்ற அமர்வு.

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மாலானி, 'எந்த ஒரு சட்டமும் கணவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மனைவியை விவாகரத்து செய்ய அனுமதிக்கக் கூடாது. இது அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாகும்' என்று வாதாடினார்.

முத்தலாக் தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் அரசியல் தளங்களில் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் முத்தலாக் தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று கறாரான கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close